விஷன் -டி கான்செப்ட்டில் உருவாகப்போகும் ஸ்கோடா ஃபேபியா
வரும் 2014ம் ஆண்டில் விஷன் டி டிசைன் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய ஸ்கோடா ஃபேபியா அறிமுகமாக இருக்கிறது.
அழகான ஹேட்ச்பேக் காராக ஸ்கோடா ஃபேபியா திகழ்கிறது. கட்டுறுதி, வடிவைப்பு ஆகியவற்றில் தரமாக இருந்தாலும் விற்பனையில் ஃபேபியா ஸ்கோடாவுக்கு உறுதுணையாக இல்லை.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய ஃபேபியா காரை ஸ்கோடா 2014ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட விஷன் டி கான்செப்ட் டிசைன் தத்துவத்தில்தான் இந்த புதிய ஃபேபியாவை வடிவமைக்க ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது.
கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் முன்பக்கம் மற்றும் பின்பக்க வடிவமைப்பு முற்றிலும் புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்பட உள்ளது புதிய ஃபேபியா. தவிர, உள்பக்கம் டேஷ்போர்டுமும் புதிய வடிவமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் புதிய வடிவமைப்பில் வரும் புதிய ஸ்கோடா ஃபேபியாவின் 3 சிலின்டர் மற்றும் 4 சிலின்டர் எஞ்சின்களும் ட்யூனிங் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








