சூப்பர்ப், லாரா கார்களுக்கு 0% வட்டியில் கடன்: ஸ்கோடா ஆஃபர்

மார்க்கெட் போட்டியை சமாளிக்க ஒவ்வொரு நிறுவனமும் புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகின்றன. அந்த வகையில், செக் குடியரை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறவனம் பல புதிய சலுகைளை அறிவித்து வருகிறது.
சமீபத்தில் சூப்பர்ப் காரின் குறைந்த விலை வேரியன்ட்டை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது அடுத்து ஒரு புதிய சலுகையையும் அந்த நிறுவனம் வழங்க உள்ளது.
சூப்பர்ப் மற்றும் லாரா கார்களுக்கு 0% வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை அந்த நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்கிறது. இதற்கான, அறிவிப்பு மற்றும் விளம்பரத்தை அந்த நிறுவனம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்த புதிய திட்டம் மூலம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர முடியும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட வேரியன்ட்களுக்கு மட்டும் இந்த புதிய திட்டம் செல்லுபடியாகும் என்று ஸ்கோடா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








