வரும் 18ந் தேதி குறைந்த விலை சூப்பர்ப் கார்: ஸ்கோடா களமிறக்குகிறது

Skoda Superb
வரும் 18ந் தேதி குறைந்த விலையில் சூப்பர்ப் காரின் புதிய வேரியன்ட்டை ஸ்கோடா விற்பனைக்கு கொண்டு வருகிறது.

ஸ்கோடாவின் பிரிமியம் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மதிப்பு இருக்கிறது. இதை தக்கவைக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும் புதிய சூப்பர்ப் காரை ஸ்கோடா அறிமுகப்படுத்துகிறது.

டொயோட்டோ நிறுவனம் விரைவில் கேம்ரி பிரிமியம் காரை விற்பனைக்கு கொண்டு வருவதால், மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் விதமாக சூப்பர்ப் காரின் குறைந்த விலை வேரியண்ட்டை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

ஆம்பிசன் என்ற வேரியண்ட் பெயரில் வரும் இந்த புதிய சூப்பர் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. எலக்ட்ரிக் சன்ரூப், டச்ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், புளூடூத், ஹில் அசிஸ்ட் பிரேக்கிங் சிஸ்டம், பை-ஸினான் ஹெட்லைட்டுகள் ஆகியவை ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்களாக இருக்கும்.

ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்ட்ம் ஆகியவையும் புதிய சூப்பர்ப் வேரியன்ட்டில் ஸ்டான்டர்டு அம்சங்கள். வரும் 18ந் தேதி விலை, புக்கிங் உள்ளிட்ட விபரங்களை ஸ்கோடா வெளியிட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 13, 2012, 17:04 [IST]
English summary
Czech carmaker Skoda is planning to counter the arrival of new executive sedans such as the Hyundai Sonata and the upcoming update to the Toyota Camry by launching a new low priced version of the Superb.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+