அடுத்த ஆண்டு வருகிறது புதிய ஸ்கோடா லாரா

ஸ்கோடா ஆட்டோவின் லாரா செடான் காருக்கு மார்க்கெட்டில் தனி மதிப்பு இருக்கிறது. மேலும்,தனி வாடிக்கையாளர் பிரிவையும் லாரா சம்பாதித்து வைத்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு புதிய லாராவை ஸ்கோடா ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த புதிய லாரா வோக்ஸ்வேகன் சமீபத்தில் அறிமுகப்படுத்திய அடுத்த தலைமுறைக்கான எம்க்யூபி பிளாட்பார்மில் வடிவமைக்கப்படுகிறது.
இதனால், தற்போதைய லாரா மாடலைவிட புதிய லாரா அதிக நீளம் கொண்டதாகவும், தாராள இடவசதியையும் கொண்டிருக்கும். அதிக இடவசதி கொண்ட காரான ஆடி ஏ3 பிரிமியம் காருக்கு இணையான இடவசதியை புதிய லாரா கொண்டிருக்கும்.
வோக்ஸ்வேகனின் மிஷன் எல் மற்றும் விஷன் டி கான்செப்ட் கார்களின் வடிவமைப்பு உந்துதலால் புதிய லாராவை ஸ்கோடா ஆட்டோ வடிவமைப்பதாக கூறப்படுகிறது. தற்போது லாராவின் பேஸ் வேரியண்ட் ரூ.13.60 லட்சத்திலும், டாப் வேரியண்ட் ரூ.18.40 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய லாரா வரும்போது பேஸ் வேரியண்ட்டை கைவிட ஸ்கோடா ஆட்டோ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அதிக விலை கொண்ட பிரிமியம் செடான் கார் ரகத்தில் புதிய லாராவை நிலைநிறுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








