ரூ.18.55 லட்சத்தில் புதிய சூப்பர்ப்: ஸ்கோடா அறிமுகம்
ரூ.18.55 லட்சம் என்ற விலையில் புதிய சூப்பர்ப் காரை ஸ்கோடா ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆம்பிஷன் என்ற வேரியன்ட்டில் வந்துள்ள இந்த சூப்பர்ப் காரில் பல முக்கிய அம்சங்களை காணவில்லை.
பிரிமியம் மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் போட்டி அதிகரித்து வருகிறது. புதிய மாடல்கள் வரவும் இதற்கு முக்கிய காரணம். கடந்த மாதம் ப்ளூயிடிக் சொனாட்டா காரை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டொயோட்டோவும் விரைவில் புதிய கேம்ரியை களமிறக்குகிறது.
இது ஸ்கோடா பல்வேறு பிரிமியம் மிட்சைஸ் கார் தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செக்மென்ட்டில் ஸ்கோடா ஆட்டோவும் முக்கிய பங்குதாரர். எனவே, போட்டியை சமாளிக்கும் வகையில் குறைந்த விலையில் புதிய சூப்பர்ப் காரின் வேரியன்ட்டை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஆம்பிஷன் என்ற வேரியன்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சூப்பர்ப் விலை குறைந்த வேரியன்ட் என்பதற்காக எந்தவொரு அம்சங்களும் குறைவாக இல்லை. போதுமான வசதிகளுடன் வந்துள்ளது. புரொஜெக்டர் ஸினான் ஹெட்லைட்டுகள், 6 சிடி சேஞ்சர் வசதியுடன் மியூசிக் ப்ளேயர் ஆகியவை முக்கிய அம்சங்கள்.
ஆனால், ஆம்பிஷன் வேரியன்ட்டில் பார்க்கிங் சென்சார் இல்லை. இவ்வளவு விலை கொண்ட காரில் பார்க்கிங் சென்சார் இல்லாதது பெரும் குறையே. பெட்ரோல் மாடல் ரூ.18.55 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.23.15 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications









