எஸ்யூவி அம்சங்களுடன் ஸ்கவுட் ஹேட்ச்பேக்: ஸ்கோடா அறிமுகம்
ஃபேபியா ஹேட்ச்பேக் காரில் கூடுதல் அம்சங்களை கொண்டதாக பிரிமியம் காராக வந்துள்ளது ஸ்கவுட். ஸ்கவுட் ஹேட்ச்பேக் காரின் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பெட்ரோல் மாடல் ரூ.6.67 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
அதேபோன்று, 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 7.96 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு விட்டுள்ளது. இரண்டும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை. பிற நகரங்களில் இதைவிட கூடுதலான ஆரம்ப விலையில்தான் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஸ்பாய்லருடன் கூடிய முன்பக்க பம்பர், டிபியூசருடன் கூடிய ரியர் பம்பர், காரை சுற்றிலும் உராய்வுகளை தவிர்க்கும் கிளாடிங், கதவுகளில் சில் ட்ரிம்ஸ், ஸ்டென்லெஸ் ஸ்டீல் பெடல் செட், லெதர் பேக்கஜ் என பக்காவான பிரிமியம் ஹேட்ச்பேக் காராக ஸ்கவுட்டை களமிறக்கியுள்ளது ஸ்கோடா.
பவர் விண்டோஸ், டின்டடு கிளாஸ், ஸ்போர்ட்டி லுக், இன்டகிரேடட் ஆடியோ சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் என அனைத்து டாப் என்ட் அம்சங்களுடன் ஸ்கவுட்டில் இருக்கிறது. மொத்தத்தில் ஃபேபியாவின் பிரிமியம் வேரியன்ட்டாக கால் பதித்துள்ளது ஸ்கவுட்.
தவிர, பார்ப்பதற்கு குட்டி எஸ்யூவி போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது ஸ்கவுட். ஹை வேரியன்ட் பிரிமியம் ஹேட்ச்பேக் காரை வாங்க தயாராக உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணங்களை கச்சிதமாக பூர்த்தி செய்யும் ஸ்கோடா ஸ்கவுட்.


Click it and Unblock the Notifications









