யூஸ்டு கார் மார்க்கெட்டில் களமிறங்க ஸ்கோடா திட்டம்

கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பல நிறுவனங்கள் யூஸ்டு கார் வாங்கி விற்கும் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளன. அந்த வரிசையில் போக்ஸ்வேகனின் கீழ் செயல்படும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் விரைவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சாதக பாதக அம்சங்களை தற்போது ஸ்கோடா ஆட்டோ ஆராய்ந்து வருகிறது. இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ தலைவர் சுதிர் ராவ் கூறுகையில்," இந்திய மார்க்கெட்டில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
சலுகைகள், தள்ளுபடி மூலம் வளர்ச்சியை எட்டுவதற்கு பதில் மாற்று வழியில் செல்ல முடிவெடுத்திருக்கிறோம். இதற்கு மாற்றாக யூஸ்டு கார் மார்க்கெட்டில் களமிறங்குவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம்," என்றார்.
இந்த நிலையில், யூஸ்டு கார் மார்க்கெட்டில் இறங்குவதற்கு முன்பாக தற்போது 102 ஆக இருக்கும் டீலர்கள் எண்ணிக்கை 150 ஆக உயர்த்த ஸ்கோடா முடிவு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் யூஸ்டு கார் மார்க்கெட்டில் கால் பதிப்பதற்கான முயற்சிகளை ஸ்கோடா மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








