ரூ.9,999 மாதத் தவணையில் ரேபிட் கார்: ஸ்கோடாவின் ஆஃபர்

ஸ்கோடா ரேபிட்
மிகக் குறைந்த மாதத் தவணை மற்றும் முன்பணத்தில் ரேபிட் காரை வாங்கும் அரிய வாய்ப்பை ஸ்கோடா ஆட்டோ வழங்குகிறது.

மிட் சைஸ் மார்க்கெட்டில் க்யூட் டிசைன் காராக வலம் வருகிறது ஸ்கோடா ரேபிட். தரமான கட்டுமானம், கையாளுமை, வசதிகள் என கவரும் ரேபிட்டை வாங்குவதற்கு ஸ்கோடா புதிய கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, மிகக்குறைந்த ரூ.9,999 மாதத் தவணையில் ஸ்கோடா ரேபிட்டை வாங்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சலுகை ரேபிட் காரின் ஆக்டிவ் 1.6 லிட்டர் மேனுவல் வேரியண்ட்டுக்கு கொடுக்கப்படுகிறது. இதுதவிர, பெட்ரோல் மற்றும் டீசல் என அனைத்து வேரியண்ட்டுகளும் சிறப்பு கடன் திட்டத்தை ஸ்கோடா வழங்குகிறது.

விலை விபரங்கள் கடந்த 3ந் தேதி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிலவரப்படி கடன் திட்டம் கணக்கிடப்பட்டிருக்கிறது. 48 மாதத் தவணைகள் கொண்ட இந்த கடன் திட்டத்தை வரும் 31ந் தேதி வரை வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும், ஸ்கோடா ஆட்டோவின் சொந்த பைனான்ஸ் நிறுவனத்தின் கீழ் இந்த கடன் திட்டம் வழங்கப்படுகிறது.

முன்பணம், மாதத் தவணை தவிர்த்து அடுத்து கொடுக்கப்பட்டிருக்கும் பலூன் தொகை கடன் முடிவடையும் கடைசி மாதத் தவணையுடன் சேர்த்து செலுத்த வேண்டும். அவற்றின் விபரங்களை கீழே காணலாம்.

ரேபிட் பெட்ரோல் வேரியண்ட் முன்பணம் மாதத்தவணை பலூன் தொகை
ரேபிட் ஆக்டிவ் 1.6 எம்டி ரூ.1,62,220 ரூ.9,999 ரூ.1,38,000
ரேபிட் ஆம்பிஷன் 1.6 எம்டி ரூ.1,39,200 ரூ.11,999 ரூ.1,47,000
ரேபிட் எலிகன்ஸ் 1.6 எம்டி ரூ.1,41,050 ரூ.13,999 ரூ.1,65,000
ரேபிட் ஆம்பிஷன்(ஆட்டோ) ரூ.1,49,800 ரூ.13,999 ரூ.1,67,000
ரேபிட் எலிகன்ஸ்(ஆட்டோ) ரூ.1,52,490 ரூ.15,999 ரூ.1,85,000
ரேபிட் டீசல் வேரியண்ட்
ரேபிட் ஆக்டிவ் 1.6 எம்டி ரூ.1,29,670 ரூ.13,999 ரூ.1,63,000
ரேபிட் ஆம்பிஷன் 1.6 எம்டி ரூ.1,35,950 ரூ.14,999 ரூ.1,72,000
ரேபிட் எலிகன்ஸ் எம்டி ரூ.1,86,581 ரூ.15,999 ரூ.1,90,000

More from DriveSpark

Article Published On: Thursday, August 9, 2012, 12:36 [IST]
English summary
Skoda has announced special emi offer for Rapid midsize sedan at INR 9999. The company offer this special finance scheme exclusively by own finance.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+