சாலை ஓரம் நிறுத்தியிருந்த காரில் திடீர் தீ : டெல்லியில் பரபரப்பு

டெல்லியில், ரானி பாக் பகுதியிலுள்ள தீபாளி சவுக் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. கார் உரிமையாளரான நிதின் மல்ஹோத்ரா டாக்டரை பார்ப்பதற்காக தனது ஸ்கோடா ரேபிட் காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் திடீரென கார் தீப்பிடித்துள்ளது. வெளியில் வந்து நிதின் பார்த்தபோது கார் தீப்பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்பு படையினர் வருவதற்குள் கார் முழுவதுமாக எரிந்துவிட்டது. இஇச்சம்பத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக கார் தீப்பிடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம்தான் இந்த காரை நிதின் வாங்கியுள்ளார்.
இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் எஞ்சினியர்களும் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஸ்கோடா ஆட்டோவின் தாய் நிறுவனமான வோக்ஸ்வேகன் தயாரிக்கும் வென்ட்டோ கார் ஒன்று புனேயில் தீப்பிடித்து எரிந்தது நினைவிருக்கலாம்.
ஸ்கோடா ரேபிட் கார் வென்ட்டோ கார் பிளாட்பார்மில்தான் வடிவமைக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரே பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் இரண்டு கார் மாடல்களும் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்துள்ளது வாடிக்கையாளர் மத்தியில் சிறிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








