இந்தியாவுக்கான 5 டோர் கொண்ட ஸ்கோடா சிட்டிகோ கார்

செக் குடியரைசை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகனின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வோக்ஸ்வேகன் அப் ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட சிட்டிகோ என்ற புதிய கார் மாடலை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியது.
இந்த கார் பக்கவாட்டில் 2 கதவுகளும், பின்புறம் ஒரு கதவையும் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த காரை இந்தியா உள்ளி்ட்ட மார்க்கெட்டுகளிலும் விற்பனை செய்ய ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இதற்காக, தற்போது 5 கதவுகள் கொண்ட புதிய சிட்டிகோ மாடலின் புகைப்படங்களை ஸ்கோடா ஆட்டோ வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு 5 டோர் கொண்ட அப் காரை வோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், அதே வடிவமைப்பில் வரும் சிட்டிகோவை இந்த ஆண்டே அறிமுகப்படுத்த ஸ்கோடா முடிவு செய்துள்ளது.
இந்த புதிய கார் ரூ.4 லட்சத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








