நீங்க குடிங்க, நாங்க கார் ஓட்றோம்: ஸ்கோடாவின் புது சேவை

Skoda Logo
"நீங்க குடிங்க, நாங்க கார் ஓட்றோம்" என்ற முழக்கத்துடன் புதிய சேவையை மும்பை வாடிக்கையாளர்களுக்கு ஸ்கோடா அறிமுகம் செய்துள்ளது.

மும்பை போன்ற மாநகரங்களில் இரவு பார்ட்டிகள் ஏராளமாக நடக்கின்றன. இதற்கு செல்பவர்கள் பத்திரமாக வீடு போய் சேர்வோமா என்ற பயத்தில் பார்ட்டியில் முழுமையான ஆனந்தத்தை அனுபவிக்காமல் பயந்து பயந்து மது அருந்துகின்றனராம். மேலும், குடித்துவிட்டு கன்னாபின்னாவென்று ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்துகின்றனர்.

இதை தவிர்த்து, அவர்கள் பயமின்றி பார்ட்டிகளில் மது அருந்தி வாழ்க்கையின் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளதாக ஸ்கோடா தெரிவி்த்துள்ளது.

இந்த புதிய சேவை குறித்து ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் கமால் பாசு கூறுகையில்,"வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது; அதேவேளை, அவர்களின் பாதுகாப்பும் முக்கியம், என்ற முறையில் இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளோம்.

மது அருந்துவது குறித்து வாடிக்கையாளர்களை எங்களிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டால், டிரைவர்கள் மூலம் அவர்களை பாதுகாப்பாக வீட்டில் கொண்டு போய் சேர்ப்பது எங்கள் கடமையாக எடுத்துக்கொள்வோம்.

மேலும், சாலை பாதுகாப்பு குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறோம்," என்றார்.

மாநகரங்களில் இதுபோன்று நடைபெறும் இரவு பார்ட்டிகளில் டிரைவர்களை அமர்த்தி வீட்டுக்கு கொண்டு விடும் சேவை ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால், ஒரு கார் நிறுவனம் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது இதுவே முதன்முறை.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 8, 2012, 15:29 [IST]
English summary
Skoda India has launched a unique service for its Mumbai customers called 'You Drink, We Drive'. This service is aimed to provide publicity to responsible driving without missing out the fun of life. Skoda hopes this service will help improve the safety of its customers and reduce accidents.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+