பாம் பாம்.. இந்திய கார்களில் ஸ்பெஷல் ஹாரன் பொருத்தும் ஆடி!

இந்தியாவில் இருக்கும் போக்குவரத்து நெரிசலில் அதிக தடவை ஹாரன்களை டிரைவர்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஐரோப்பிய போக்குவரத்து சூழ்நிலைகளுடன் இந்தியாவை ஒப்பிடும்போது அதிக வித்தியாசம் இருக்கிறது.
ஐரோப்பிய சாலைகளில் அதிக தடவை ஹாரன் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை. எனவேதான், நீடித்து உழைக்கும் வகையிலான ஹாரன்களை இந்தியாவுக்காக தயாரிக்கிறோம்.
மேலும், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு வேறு சப்ளையர்களிடமிருந்து ஹாரன்களுக்கான பாகங்களை பெற்று தயாரிக்கிறோம்.
ஹாரன் சப்தம் மற்றும் இந்திய தட்ப வெப்பம் என அனைத்திலும் மிகந்த கவனத்துடன் சோதனைகளை நடத்திய பிறகே கார்களில் பொருத்துகிறோம். இது மிகுந்த பாதுகாப்பை உறுதி செய்யும்," என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








