இந்தியாவில் ரூ.6,000 கோடியை முதலீடு செய்யும் சாங்யாங்

Ssangyong SUV
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.6,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக சாங்யாங் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்ற தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச்சில் மஹிந்திராவின் கைக்கு மாறியது முதல் நல்ல வளர்ச்சி கண்டு வரும் அந்த நிறுவனம், தனது வர்த்தக விரிவாக்க பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவை தனக்கு மிகப்பெரிய வர்த்தக மையமாக மாற்றிக்கொள்ள சாங்யாங் முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்தியாவில் தனது கார்களை அசெம்பிளிங் செய்ய திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது.

இதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.6000 கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாக சாங்யாங் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் அந்த நிறுவனம் கருத்தில்க்கொண்டு இந்த முதலீட்டை செய்கிறது.

அடுத்த சில மாதங்களில் ரெக்ஸ்டன் எஸ்யூவியையும், இதைத்தொடர்ந்து கொரண்டோ எஸ்யூவியையும் மஹிந்திரா மூலம் சாங்யாங் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, February 6, 2012, 15:54 [IST]
English summary
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.6,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக சாங்யாங் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்ற தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச்சில் மஹிந்திராவின் கைக்கு மாறியது முதல் நல்ல வளர்ச்சி கண்டு வரும் அந்த நிறுவனம், தனது வர்த்தக விரிவாக்க பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.இந்த நிலையில், இந்தியாவை தனக்கு மிகப்பெரிய வர்த்தக மையமாக மாற்றிக்கொள்ள சாங்யாங் முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்தியாவில் தனது கார்களை அசெம்பிளிங் செய்ய திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது.இதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.6000 கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாக சாங்யாங் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் அந்த நிறுவனம் கருத்தில்க்கொண்டு இந்த முதலீட்டை செய்கிறது.அடுத்த சில மாதங்களில் ரெக்ஸ்டன் எஸ்யூவியையும், இதைத்தொடர்ந்து கொரண்டோ எஸ்யூவியையும் மஹிந்திரா மூலம் சாங்யாங் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.Ssangyong, the South Korean SUV specialist and the subsidiary of Mahindra and Mahindra is planning to make huge investments in India. Ssangyong's Indian investment is expected to be to the tune of $1.2 billion spanned over the next three to five years. This money will be utilized to set up a manufacturing base that will cater to local sales as well as exports.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+