4 புதிய எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா சாங்யாங் ஆயத்தம்

தென் கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் உலக அளவில் எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த சாங்யாங் மோட்டார்சை கடந்த ஆண்டு மஹிந்திரா கையகப்படுத்தியது.
அதுமுதல், சாங்யாங் மோட்டார்சின் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது அந்த நிறுவனம் புது உத்வேகத்துடன் தனது அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 4 ஆண்டுகளில் விற்பனை வளர்ச்சியை கூட்டும் விதமாக புதிதாக 4 எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக சாங்யாங் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் தற்போது நடந்து வரும் மோட்டார் ஷோவில் எக்ஸ்ஐவி2 என்ற குறியீட்டு பெயரில் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை சாங்யாங் பார்வைக்கு வைத்துள்ளது. வரும் 2015ம் ஆண்டில் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி உற்பத்தி நிலையை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய எஸ்யூவி 25 முதல் 40 நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சாங்யாங் தயாரிக்கப்போகும் 4 புதிய எஸ்யூவி மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








