சாங்யாங் ரெக்ஸ்டன் பிரிமியம் எஸ்யூவியை அறிமுகப்படுத்திய மஹிந்திரா

சாங்யாங் போர்ட்போலியோவிலிருந்து முதலாவதாக ரெக்ஸ்டன் எஸ்யூவியை இன்றுமுதல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது மஹிந்திரா.

பிரிமியம் ரகத்தில் வந்துள்ள ரெக்ஸ்டன் மஹிந்திராவின் எஸ்யூவி மார்க்கெட்டை இன்னும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு டீசல் எஞ்சின் வேரியண்ட்களில் சாங்யாங் ரெக்ஸ்டன் வந்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ஆற்றல் வாய்ந்த 2.7 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சினுடன் வந்துள்ளது புதிய ரெக்ஸ்டன்.

பவர்

பவர்

ஆஎக்ஸ் 5 வேரியண்ட் 162 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆர்எக்ஸ் 7 வேரியண்ட் 184 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

ஆர்எக்ஸ்5 வேரியண்ட் ரூ.17.67 லட்சத்திலும், ஆர்எக்ஸ்7 வேரியண்ட் ரூ.19.67 லட்சத்திலும் மஹாராஷ்டிர எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

பீயேஜ் மற்றும் கருப்பு வண்ணக் கலவை கொண்ட இன்டிரியருடன் வந்திருக்கிறது ரெக்ஸ்டன்.

புரொஜெக்டர் ஹெட்லைட்

புரொஜெக்டர் ஹெட்லைட்

பருந்து கண் வடிவமைப்பை கொண்ட புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல் வடிவ பார்க்கிங் லைட்டுகள் குறிப்பிடத்தக்க அம்சம். ரியர் வியூ மிரரில் எல்இடி இன்டிகேட்டர் விளக்கு பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் கவர்ச்சியை கொடுக்கும்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பத்துடன், இ ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வந்துள்ளது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில் இன்டலிஜென்ட் 4*4 டார்க் ஆன் டிமான்ட் சிஸ்டத்தை கொண்டிருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

ஆர்எக்ஸ் 5 வேரியண்ட் லிட்டருக்கு 12.4 கிமீ மைலேஜையும், ஆர்எக்ஸ் 7 வேரியண்ட் லிட்டருக்கு 11.18 கிமீ மைலைஜையும் தரும் என்று அராய் சான்று கூறுகிறது. 4 வண்ணங்களில் கிடைக்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

6 ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி, ஆக்ஸ் டிவிடி பிளேயருடன் கூடிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள், கீ லெஸ் என்ட்ரி, சன் கிளாஸ் ஹோல்டர் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

டாப் ஸ்பீட்

டாப் ஸ்பீட்

ஆர்எக்ஸ் 5 மாடல் அதிகபட்சம் மணிகக்கு 180 கிமீ வேகத்திலும், ஆர்எக்ஸ் 7 வேரியண்ட் மணிக்கு 194 கிமீ வேகத்திலும் செல்லும். ஹில் அசிஸ்ட், ஏபிஎஸ், டூவல் ஏர்பேக்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சமில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 17, 2012, 14:50 [IST]
English summary
The Ssangyong Rexton SUV that has been launched in India is the third generation of the Rexton. The Rexton SUV is currently being offered in a diesel engine and two variants, the RX5 manual transmission and RX7 automatic transmission.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+