டாடா மோட்டார்ஸ் பொருளாதார தர வரிசையை உயர்த்திய எஸ் அண்ட் பி

BB(-) என்ற தர வரிசையில் வைக்கப்பட்டிருந்த டாடா மோட்டார்ஸ் தற்போது BB என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் போட்டி நிலை மற்றும் ஸ்திரமான பணப் புழக்கம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு தர வரிசையை உயர்த்தியிருப்பதாக ஸ்டான்டர்டு அண்ட் புவர் தெரிவி்த்துள்ளது.
மேலும், டாடா மோட்டார்சின் வர்த்தக நிலை சாதகமான சூழ்நிலையை கொண்டிருப்பதாகவும் எஸ் அண்ட் பி மதிப்பிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு பிரிட்டிஷ் பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டே இந்த தர வரிசையை எஸ் அண்ட் பி மதிப்பீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாயில் தற்போது 60 சதவீதம் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனங்களிடமிருந்து வருகிறது. மேலும், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் எஸ் அண்ட் பி கணித்து டாடா மோட்டார்ஸ் தர வரிசையை உயர்த்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கடன் தர வரிசையை BBB ல் இருந்து BBB(-) என்ற நிலைக்கு குறைத்து அறிவித்தது எஸ் அண்ட் பி. இந்த நிலையில், தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தர வரிசையை அந்த நிறுவனம் உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








