காரில் கருப்பு பிலிமை அகற்றாவிட்டால் லைசென்ஸ் ரத்து செய்யப்படுமா?

Tinted Glass Car
கார் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிம்களை அகற்றாமல் தொடர்நது விதியை மீறும் டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று வெளியான தகவலை பெங்களூர் போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் மறுத்துள்ளார். இதுபோன்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கார் கண்ணாடியில் ஒட்டப்படிருக்கும் கருப்பு பிலிம்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காலக் கெடு முடிந்தும் காரில் கருப்பு கண்ணாடியுடன் வருபவர்களுக்கு முதல் முறை 100 ரூபாயும், இரண்டாவது முறை 300 ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், காரில் கருப்பு பிலிமை அகற்றாமல் தொடர்ந்து விதியை மீறும் டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பெங்களூர் போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் கூறுகையில்,"காரில் கருப்பு கண்ணாடியுடன் வரும் டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்வதற்கு துறை ரீதியில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மேலும், லைசென்சை ரத்து செய்ய போலீசாருக்கு அதிகாரம் இல்லை. ரத்து செய்ய ஆர்டிஓ அலுவலருக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்," என்றார்.

இந்த தகவல் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர். கருப்பு பிலிமை நீக்கவும், அபராதம் விதிக்கவும் மட்டுமே சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்வது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

மேலும், தொடர்ந்து விதியை மீறும் வாகனத்தின் பதிவை சஸ்பென்ட் செய்ய முடியும். அதுவும், உரிமையாளருக்கு முறையான தகவல் தெரிவித்த பின்னரே வாகனத்தின் பதிவை சஸ்பென்ட் செய்ய வழி இருக்கிறது. தவிர, டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய வழியில்லை," என்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, June 18, 2012, 11:27 [IST]
English summary
Bangalore Additional Commissioner of Police (Traffic) said that his department did not issue any "threat" to cancel the licence. He added that they can only recommend to the licensing authority (RTO) to cancel the driving licence for repeated offences.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+