பிரிட்டனில் புதிய ரிட்ஸ் அறிமுகம்: அடுத்து இந்தியாவா?

ஸ்ப்ளாஷ் என்ற பெயரில் அங்கு விற்பனை செய்யப்பட்டு வரும் ரிட்ஸ் தற்போது பம்பர், பானட் என முன்பக்கம் நிறைய மாற்றம் கண்டுள்ளது. தவிர, முன்பக்க கிரில் டிசைனும் மாற்றம் கண்டிருக்கிறது. ஆனால், உட்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஒரு சில மாற்றங்கள் மட்டுமே கண்டிருக்கிறது.
1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் ஆகிய இரண்டு மாடல்களில் புதிய ரிட்ஸ் வந்துள்ளது. இதில், 1.0 லிட்டர் எஞ்சின் கொண்ட மாடல் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜையும், 1.2 லிட்டர் எஞ்சின் கொண்ட மாடல் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜையும் தரும் என்று சுஸுகி தெரிவித்துள்ளது.
கூடுதலாக புதிய நீலம் மற்றும் பழுப்பு கலர்களில் ரிட்ஸ் விற்பனைக்கு கிடைக்கும் என சுஸுகி தெரிவித்துள்ளது. ரூ.6.69 லட்சத்தில் புதிய ரிட்ஸ் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து அடுத்து இந்திய மார்க்கெட்டில் புதிய ரிட்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








