ஸ்விப்ட் கார்களில் எரிபொருள் கசிவு: திரும்ப பெறும் சுஸுகி

ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் கார்கள் சர்வதேச அளவில் விரும்பப்படும் கார் மாடலாக திகழ்கிறது. மேலும், சுஸுகியின் தரமான தயாரிப்பாகவும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்விப்ட் கார்களின் எரிபொருள் குழாயிலிருந்து கசிவு இருப்பது குறித்து ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, பிரச்னைக்குரியதாக கருதப்படும் 1.09 லட்சம் கார்களை திரும்ப பெற இருப்பதாக சுஸுகி அறிவித்துள்ளது.
திரும்ப பெறப்பட இருக்கும் கார்கள் அனைத்தும் ஜப்பானிலுள்ள ஆலையில் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை தயாரிக்கப்பட்டவை. இதில், பாதியளவு கார்களை ஜப்பானில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ளவை ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை. எனவே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்விப்ட் கார்களுக்கு இந்த ரீகால் அறிவிப்பு பொருந்தாது என்று மாருதி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








