கோவாவில் காதலர் தின ஸ்பெஷல் நானோ கார் அறிமுகம்

காதலர் தினத்தையொட்டி ஸ்பெஷல் எடிசன் நானோ காரை கோவாவில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஷோரூமில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

காதலர் தினத்தையொட்டி புதுமையான பரிசுப் பொருட்கள் ஏராளமாக அறிமுகமாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில், காதலர்களின் சொர்க்க பூமியாக கருதப்படும் கோவாவில் காதலர் தின கொண்டாடட்டங்கள் இப்போதே களை கட்டியுள்ளன.

இந்த கொண்டாடட்டத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காதலர் தின ஸ்பெஷல் எடிசன் நானோ காரை அங்கு அறிமுகம் செய்துள்ளது.

காதலர்களை கண்டவுடன் காதல் கொள்ள செய்யும் வகையில்,சிவப்பு கலரில் வந்துள்ளது. மேலும், கார் வெளிப்புறம் முழுவதும் காதலின் சின்னமான இதயம் மற்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த காரின் கண்ணாடிகளில் சன்பிலிம் கன்ட்ரோல் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உட்புறத்தை பொறுத்தவரை பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால், வெளிப்புறம் முழுவதும் இது காதலர்களுக்கான கார் என்று பரைசாற்றும் வகையில் இருக்கிறது. எனவே, ஸ்பெஷல் எடிசன் நானோ நிச்சயம் காதலர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 20 நானோ கார்கள் மட்டும் காதலர் தின ஸ்பெஷல் எடிசனாக விற்பனை செய்யப்பட உள்ளது. நானோ சிஎக்ஸ் வேரியண்ட்டில் ரூ.2.05 லட்சம் விலையில் இந்த நானோ கார்கள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நானோ கார் மற்ற மாடல்களை விட ரூ.20,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 11, 2012, 11:24 [IST]
English summary
Tata motors Goa dealer has introduced lovers day special edition Nano car in Goa. The Valentine Edition commands a premium of about Rs. 20,000 over the standard Nano CX.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+