இந்தோனேஷிய ஆட்டோ ஷோவில் கலக்கும் டாடா நானோ
இந்தோனேஷிய ஆட்டோமொபைல் கண்காட்சியின் நுழைவுவாயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் டாடா நானோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அடுத்த ஆண்டு இந்தோனேஷிய மார்க்கெட்டில் டாடா மோட்டார்ஸ் காலடி எடுத்து வைக்கிறது. அந்த நாட்டை சேர்ந்த பிடி நிறுவனத்துடன் இணைந்து வாகனங்களை விற்பனை செய்ய இருக்கிறது.

நமக்கு பழக்கப்பட்டு விட்டாலும், இந்தோனேஷிய மக்களுக்கு இது புதிதல்லவா. எனவே, நானோ காரை ஒரு சுற்று சுற்றி வந்த பின்னரே அரங்கிற்குள் செல்கின்றனர். இதனால், டாடா மோட்டார்ஸ் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும், இந்தோனேஷியாவிலேயே உதிரிபாகங்களை பெற்று அங்கேயே அசெம்பிள் செய்து நானோ காரை விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இதனால், அங்கு நானோ கார் இந்திய மதிப்பில் ரூ.5.11 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நானோ தவிர ஸினான் டபுள் கேபின் பிக்கப் டிரக், ஏஸ் மினி டிரக், பிரைமா டிப்பர் டிரக் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களையும் டாடா காட்சிக்கு வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications