புதிய ஷோரூம் அமைக்கும் டீலர்களுக்கு கமிஷனை கணிசமாக உயர்த்தி தரும் ஃபியட்

Fiat Caffe
புதிய ஷோரூம் திறப்பதற்காக டீலர்களுக்கு கமிஷனை 3.5 சதவீதம் கூடுதலாக தருவதாக ஃபியட் டாடா டீலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய மார்க்கெட்டில் டாடாவுடன் கூட்டணி அமைத்து கார் உற்பத்தி மற்றும் விற்பனையை கவனித்து வருகிறது இத்தாலி நிறுவனமான ஃபியட்.

டாடா ஆலையில் கார் உற்பத்தியும், டாடா ஷோரூம்களிலேயே ஃபியட் கார்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு கைமாறாக ஃபியட் நிறுவனத்தின் டீசல் எஞ்சின் தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் பெற்று வருகிறது.

இந்த டீசல் எஞ்சின்கள் இண்டிகா வரிசை கார்களில் பொருத்தப்படுகின்றன. இந்த நிலையில், முந்தாநாள் வந்த கார் நிறுவனங்கள் விற்பனையில் அதீத வளர்ச்சி கண்டு நிலையில், ஃபியட் கார் விற்பனை மிகவும் பின்தங்கி இருக்கிறது.

மேலும், டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலேயே கார் விற்பனை செய்யப்படுவதால், தனது கார் விற்பனைக்கு டீலர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று ஃபியட் கருதுகிறது.

எனவே, டாடா ஷோரூம்களில் கார் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு, தனியாக ஷோரூம்களை திறக்க ஃபியட் முடிவு செய்துள்ளது. இதற்காக, டாடா டீலர்களுக்கு அந்த நிறுவனம் வலை விரித்துள்ளது.

டெல்லியில் திறக்கப்பட்டுள்ளதைபோல் நாடு முழுவதும் புதிதாக 20 காபி கஃபேக்களை திறக்க ஃபியட் முடிவு செய்துள்ளது. இதற்காக டாடா டீலர்களுக்கு அந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

புதிய காபி கஃபே திறக்கும் டீலர்களுக்கு கார்களுக்கான கமிஷனை 5 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதம் தருவதாக அந்த நிறுவனம் ஆசை வார்த்தை காட்டியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 21, 2012, 10:24 [IST]
English summary
Indian carmaker Tata's joint venture with Italian carmaker Fiat has been revised with new terms and conditions, reported the Money Control. Fiat decided to focus more on the Indian market and hence responding to customer demand, it had revamped its cars which are currently being sold in India – the Linea and the Punto ahead of the 2012 Delhi Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+