கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் வரும் லிமிடேட் எடிசன் நானோ
கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் கூடிய லிமிடேட் எடிசன் நானோ காரை டாடா மோட்டார்ஸ் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
பண்டிகை காலத்தையொட்டி அனைத்து கார் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சலுகைகள், தள்ளுபடிகள் என ஒரு பக்கம் தண்டோரக்களை போட்டு வரும் கார் நிறுவனங்கள் லிமிடேட் எடிசன் மாடல்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த வரிசையில், ரூ.25,000 மதிப்புடைய ஆக்சஸெரீஸ்களுடன் லிமிடேட் எடிசன் நானோ காரை டாடா அறிமுகப்படுத்த உள்ளது. அலாய் வீல், 2 ஸ்பீக்கர்களுடன் யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் வசதிகொண்ட பிளாபுங்கட் மியூசிக் சிஸ்டத்துடன் வருகிறது லிமிடேட் எடிசன் நானோ.
திறந்து மூடும் வசதிகொண்ட கிளவ் பாக்ஸ் நானோவுக்கு கூடுதல் அம்சமாக இருக்கும். எல்எக்ஸ் வேரியண்ட்டில் கிராபிக்ஸ் ஸ்டிக்கர் கொண்டதாக வருகிறது. லிமிடேட் எடிசன் நானோ 6 வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், லிமிடேட் எடிசன் நானோ குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
Image source: Gaddi.com


Click it and Unblock the Notifications