ரூ.3.5 லட்சத்தில் அமெரிக்காவுக்கு நானோ கார்: ரத்தன் டாடா அறிவிப்பு

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவில் நானோ காரை அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். மேலும், 7,000 டாலர் (இந்திய ரூபாயில் 3.5 லட்சம்) விலையில் நானோ அங்கு விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகக்குறைந்த விலை கார் என்ற பெருமையுடன் உலகை ஒரு ரவுண்டு வர நானோ கார் ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே, அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் நானோ காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

அடுத்து வங்கதேசத்திலும் நானோ கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் நானோவை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் தீவிமாக ஈடுபட்டுள்ளது.

தவிர, ஐரோப்பிய சந்தையில் பிக்ஸல் என்ற பெயரில் நானோ காரை விற்பனைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை டாடா மோட்டார்ஸ் முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவில் நானோ கார் அறிமுகம் செய்யப்படும் டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க தர நிர்ணயத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட மாடலாக செல்லும் நானோ காரில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 14, 2012, 9:36 [IST]
English summary
Indian auto major Tata Motors is aiming to launch its world’s cheapest car Tata Nano in the American market. The proposed US version Nano would be a completely revamped product with added safety, technology features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+