விலையை குறைத்து சஃபாரியை விற்பனை செய்ய டாடா திட்டம்!

டாடாவின் மிக முக்கியமான மாடல்களில் சஃபாரியும் ஒன்று. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியை வரும் 17ந் தேதி விற்பனைக்கு கொண்டு வருகிறது டாடா. மேம்படுத்தப்பட்ட மாடல்கள் வரும்போது பழைய மாடல்கள் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம்.
ஆனால், சந்தை போட்டியை சமாளிக்கும் விதத்தில் தற்போதைய சஃபாரியையும் விலையை குறைத்து தொடர்ந்து விற்பனை செய்ய டாடா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை குறைக்கப்பட உள்ளதால் சில ஆக்சஸெரீஸ்களையும் தற்போதைய சஃபாரியில் இருந்து நீக்குவதற்கும் டாடா முடிவு செய்துள்ளது.
புதிய சஃபாரி ஸ்ட்ராம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் இந்த விலை குறைந்த சஃபாரியை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், தற்போது டாடா சஃபாரிக்கு ரூ.60,000 மதிப்புடைய சலுகைகளை வழங்குவதாக டாடா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








