டாடா மோட்டார்சின் புதிய மேலாண் இயக்குனராக கார்ல் ஸ்லிம் நியமனம்

டாடா மோட்டார்சின் மேலாண் இயக்குனராக பதவி வகித்து வந்த தலாங் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். வயதை காரணம் காட்டி அவர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். இந்த நிலையில், காலியாக இருந்த அந்த இடத்தை தற்போது கார்ல் ஸ்லிம் நிரப்ப உள்ளார்.
கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் கார்ல் ஸ்லிம் பணிபுரிந்து வந்தார். அந்த நிறுவனத்தில் பல்வேறு உயர் பொறுப்புகளையும் வகித்துள்ளார். கடைசியாக ஜெனரல் மோட்டார்சின் சீனப் பிரிவுக்கான தலைவராக பணிபுரிந்து வந்தார்.
மேலும், கார்ல் ஸ்லிமுக்கு இந்திய மார்க்கெட் புதிதல்ல. இந்தியாவிலும் ஜெனரல் மோட்டார்ஸ்(செவர்லே) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பதவிகளை வகித்தவர்தான். இந்த நிலையில், வரும் அக்டோபர் 1ந் தேதி முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மேலாண் இயக்குனராக கார்ல் ஸ்லிம் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








