ரூ.10 லட்சத்துக்குள் புதிய எலக்ட்ரிக் கார்: டாடா மும்முரம்

Tata eMO
ரூ.10 லட்சத்துக்குள் புதிய எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகளை டாடா மோட்டார்ஸ் முடுக்கிவிட்டுள்ளது.

பிரான்சை சேர்ந்த டசால்ட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய எலக்ட்ரிக் காரை டாடா தயாரித்து வருகிறது.

4 பேர் பயணம் செய்யும் வசதிகொண்டதாக இருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் கார் சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. குறைந்த இடத்தில் 4 பயணிகளுக்கு போதுமான இடவசதி மற்றும் இதர தொழில்நுட்ப வசதிகளுடன் எலக்ட்ரிக் காரை தயாரிப்பதில் பல சவால்கள் இருப்பதாக டாடா தெரிவித்துள்ளது.

இந்த எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் திட்டம் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் கார் நிச்சயம் மார்க்கெட்டில் புதிய அத்யாயத்தை எழுதும் என டாடா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இண்டிகா ஹேட்ச்பேக் காரின் எலக்ட்ரிக் மாடலையும் விரைவில் அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

நார்வே நாட்டை சேர்ந்த நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் எலக்ட்ரிக் இண்டிகாவை தற்போது டாடா வடிவமைத்து வருகிறது. விரைவில் இந்த கார் மார்க்கெட்டுக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, June 22, 2012, 10:18 [IST]
English summary
Tata Motors, one of the leading Indian vehicle manufacturer more famous globally for building the world's cheapest car Nano is reportedly planning to develop a new electric car. Tata Motors electric car will be a joint venture with France based Dassualt Systemes. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+