வென்ச்சருக்கு சிறப்பு சர்வீஸ் முகாம்: டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு

மாருதி ஓம்னிக்கு போட்டியாக ஏராளமான வசதிகளுடன் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் மினி வேன் வென்ச்சர். இடவசதி மற்றும் ஏராளமான வசதிகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் வென்ச்சர் விற்பனையில் மிதமான வளர்ச்சி பெற்று வருகிறது.
இந்த நிலையில், வென்ச்சர் மினி வேனுக்கு சிறப்பு சர்வீஸ் முகாமை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. நேற்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த சிறப்பு சர்வீஸ் முகாம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பயன் தரும் என்று டாடா தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் நலன் கருதி நடத்தப்படும் இந்த சிறப்பு சர்வீஸ் முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு டாடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 281 அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் ஸ்டேஷன்களில் இந்த சிறப்பு சர்வீஸ் முகாம் நடக்கிறது.
டாடா வென்ச்சர் 5 பேர்,7 பேர் மற்றும் 8 பேர் அமர்ந்து செல்லும் மூன்று மாடல்களில் கிடைக்கிறது. அதிக சக்திவாய்ந்த ஏசி மற்றும் தாராள இடவசதி ஆகிய சிறப்பம்சங்கள் கொண்ட வென்ச்சரில் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
அராய் சான்றுபடி லிட்டருக்கு 15.42 கிமீ மைலேஜ் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.4.53 லட்சம் ஆரம்ப விலையில் வென்ச்சர் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications