அடுத்த ஆண்டு வருகிறது புதிய எஞ்சினுடன் பெரிய டாடா நானோ

Tata Nano
பவர்ஃபுல் எஞ்சின் மற்றும் இதர புதிய அம்சங்களுடன் பெரிய நானோ காரை வடிவமைக்கும் பணிகளி்ல் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக இறங்கியுள்ளது. அடுத்த ஆண்டு இந்த புதிய நானோ மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழைகளின் கார் என்ற முத்திரையை நானோவிடமிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டு வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற சிறந்த கார் என்ற பெயர் நானோவுக்கு கிடைக்க வேண்டும் என்று டாடா விரும்புகிறது.

இதற்கு தக்கவாறு பல்வேறு முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் ஏராளமான புதிய மாற்றங்களுடன் நானோ காரை டாடா அறிமுகம் செய்தது. அதுமுதல், நானோவின் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நானோ காரை இன்னும் ஒரு படி மேலே கொண்டு போவதற்கான முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது. இதற்காக, புதிய எஞ்சின் மற்றும் இதர மாற்றங்களை நானோ காரில் செய்கிறது டாடா.

தற்போது நானோ காரில் 624 சிசி எஞ்சின் நானோ காரில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 38 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். ஆனால், புதிதாக வரும் பெரிய நானோவில் 900 சிசி எஞ்சின் பொருத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த எஞ்சின் 60 முதல் 80 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று டாடா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பெரிய டயர்கள், அதிக விட்டம் கொண்ட வீல்கள் என பெயரில் மட்டுமே நானோ காராக இருக்கும். மற்றபடி, அனைத்திலும் சிறந்த ஹெட்ச்பேக் காராக நானோ இருக்கும்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு பெரிய நானோ கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கு கால நிர்ணயம் எதையும் செய்யவில்லை என்று டாடா தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 1, 2012, 11:40 [IST]
English summary
Tata Motors is planning to launch more powerful Nano with more powerful engine. “We have variants coming out with a three-cylinder engine developing 60bhp or 80bhp and we will also give the Nano larger tyres and wheels,” Tata Motors chairman Ratan Tata said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+