காற்றில் இயங்கும் டாடா கார்: ஷோரூமுக்கு வருவதில் தாமதம்

மாற்று எரிபொருளில் இயங்கும் வாகன தயாரிப்புக்கு அதிக அவசியம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் தற்போது சிறந்த தீர்வாக இருக்கின்றன. ஆனால், இதற்கு அடுத்தபடிக்கு செல்ல நினைத்த டாடா காற்றில் இயங்கும் காரை வடிவமைத்து வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த புதிய காரை வடிவமைக்கும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் மும்முராக ஈடுபட்டு வருகிறது. ஐரோப்பிய நிறுவனத்தின் காற்றில் இயங்கும் எஞ்சின் தொழில்நுட்பத்தை லைசென்ஸ் பெற்று தனது இரண்டு இலகு ரக கார்களில் இந்த எஞ்சினை பொருத்தி சோதனைகள் நடத்தி வருகிறது டாடா.
கடந்த சில மாதங்களுக்கு முன் காற்றில் இயங்கும் கார் முதல்கட்ட சோதனைகளில் வெற்றிகரமாக கடந்துவிட்டதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து, இந்த கார் விரைவில் உற்பத்தி நிலையை எட்டும் என கருதப்பட்டது. ஆனால், இரண்டாம் கட்ட சோதனைகளில் சில இடர்பாடுகள் எழுந்துள்ளது.
எஞ்சினை குளிர்விக்கும் தொழில்நுட்பத்தில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த புதிய கார் உற்பத்தி நிலைக்கு எட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. எனினும், இந்த பிரச்னையை சரிசெய்து எஞ்சினை மேம்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய காரில் 3 பெரியவர்கள் ஒரு சிறியவர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். மணிக்கு 56 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது. மேலும், 200 கிமீ செல்வதற்கு வெறும் 70 ரூபாய் மட்டுமே செலவாகும் என டாடா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயற்கை எரிவாயுவில்(சிஎன்ஜி) இயங்கும் கார்கள் போன்று அழுத்தம் கூட்டப்பட்ட காற்றில் இயங்கும் காரை அந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த காரின் முதல்கட்ட சோதனை நிலையை கடந்துவிட்டது.


Click it and Unblock the Notifications