புதிய ஆம்னி பஸ்சை விற்பனைக்கு கொண்டு வந்த டாடா மோட்டார்ஸ்

நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கான மார்க்கெட் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், இந்த மார்க்கெட்டை குறிவைத்து பல்வேறு நிறுவனங்கள் புதிய சொகுசு பஸ்களை அறிமுகப்படுத்தி வருகிறது.வால்வோ பஸ்கள்தான் இந்த மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கிறது.
இதற்கடுத்து, ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆம்னி பஸ்கள் விற்பனையாகி வருகின்றன. இந்த நிலையில், இரு நிறுவனங்களுக்கும் கடும் சவாலான விலையில் திவோ என்ற பெயரில் புதிய ஆம்னி பஸ்சை டாடா மோட்டார்ஸ் தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
விரும்பும் வசதிகளுடன் தனது ஆலையிலேயே இந்த பஸ்களை வடிவமைத்து கொடுப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. டாடாவின் துணை நிறுவனமான ஸ்பெயினை சேர்ந்த ஹிஸ்பானோவிடமிருந்து திவோ பஸ்சுக்கான உதிரிபாகங்களை இறக்குமதி செய்து டாடா ஆலையில் இந்த பஸ் கட்டப்படுகிறது.
திவோ சொகுசு பஸ்சில் 285 எச்பி ஆற்றல் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஸ்கூல் மற்றும் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் புதிய ஸ்டார்பஸ் அல்ட்ரா என்ற புதிய பஸ் மாடலையும் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டுள்ளது.
திவோ சொகுசு பஸ் ரூ.66 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஸ்டார்பஸ் அல்ட்ரா பஸ் ரூ.15 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








