பிப்ரவரியில் நானோ விற்பனை ஏகபோகம்: டாடா பெரு மூச்சு

உலகின் மிகக்குறைந்த விலை கார் என்ற பெயரை தொடர்ந்து தக்கவைத்து வரும் நானோவுக்கு கடந்த ஆண்டு சோதனைகளை சந்தித்தது. ஆனால், நானோவின் விற்பனையை தூக்கி நிறுத்த டாடா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு தற்போது பலன் கிட்டியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் புதிய நானோ மாடல் விற்பனைக்கு வந்தது முதல் அந்த காரின் விற்பனை தொடர்ந்து நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த மாதம் 9,217 நானோ கார்கள் விற்பனையாகியுள்ளது. இதனால், டாடா சற்று நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி விற்பனையுடன் ஒப்பிடும்போது(8,262 கார்கள்) இது 11.56 சதவீதம் கூடுதல். இதனிடையே, பிப்ரவரியில் டாடா மோட்டார்ஸ் வாகன விற்பனை 19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் 77,543 வாகனங்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 92,119 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதனால், விற்பனை 19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
(அதிக அப்டேட்டுகளுக்கு எங்களது ஃபேஸ்புக் ஃபேன் பக்கத்துக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்)


Click it and Unblock the Notifications








