சீனாவிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய டாடா முடிவு

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களுக்கு நம் நாட்டு மார்க்கெட்டில் மெல்ல வரவேற்பு அதிகரித்து வருகிறது. அனைத்து நிறுவனங்களும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்துவிட்டன.
ஆனால், டாடா மோட்டார்ஸ் இதுவரை ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களை அறிமுகம் செய்யவில்லை. எனவே, இந்த குறையை போக்குவதற்கும், சந்தை போட்டியை சமாளிக்கவும் ஆட்டோமேட்டிக் கார்களை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதிக அளவில் தேவை இருக்காது என்பதால் உள்நாட்டு சப்ளையர்கள் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்களை தயாரிக்க விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, சீனாவிலிருந்து ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்களை இறக்குமதி செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும், உள்நாட்டு சப்ளையர்களை ஒப்பிடும்போது சீனாவில் மலிவு விலையில் உதிரிபாகங்களை வாங்க முடியும். எனவே, உள்நாட்டில் கிடைக்காத உதிரிபாகங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








