டாடா மோட்டார்சின் புதிய ஆலையில் வாகன உற்பத்தி துவக்கம்

நாட்டின் மிகப் பெரிய வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வர்த்தக விரிவாக்கப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம், தார்வார்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய ஆலை வாகன தயாரிப்பு ஆலையை கட்டியுள்ளது.
இந்திய பசுமை கட்டுமான கழகத்தின்(ஐஜிபிசி) வழிகாட்டுதல்களின்படி கட்டப்பட்டுள்ள இந்த புதிய ஆலையில் உற்பத்தி முறைப்படி துவங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 600 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்ட டாடா ஏஸ் ஸிப் மற்றும் 4 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட மாஜிக் ஐரிஸ் பயணிகள் வாகனம் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதுதவிர, பிற எந்த வாகன மாடல்களையும் இந்த ஆலையில் உற்பத்தி செய்யக் கூடிய வசதியுடன் உற்பத்தி பிரிவு கட்டப்பட்டிருப்பது இதன் முக்கிய சிறப்பம்சம். 405 ஏக்கரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலையை சுற்றிலும் உதிரிபாகங்கள் சப்ளையர்களின் ஆலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஐஎஸ்ஓ 14001 தரச் சான்றுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலையில் 350 நிரந்தர தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், 76 பயிற்சி பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications