இண்டிகா வரிசையில் புதிய எம்பிவி கார்: டாடா அறிமுகப்படுத்துகிறது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக இண்டிகா ஹேட்ச்பேக் கார் திகழ்கிறது. இதனால், இண்டிகா வரிசையில், என்ட்ரி லெவல் செடான் காரையும் டாடா விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், இண்டிகா வரிசையில் புதிய எம்பிவி காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய எம்பிவி காரின் சோதனை ஓட்டங்கள் தற்போது புனே சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.
இண்டிகா ஹேட்ச்பேக் காரைவிட அதிக இடவசதி, குறைந்த பராமரி்ப்பு செலவு கொண்டதாக புதிய எம்பிவியை டாடா வடிவமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இண்டிகா எக்ஸ்எல் என்ற குறியீட்டு பெயரில் இந்த புதிய எம்பிவி கார் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த புதிய எம்பிவி கார் டாக்ஸி உரிமையாளர்களை குறிவைத்து டாடா மோட்டார்ஸ் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








