தென் ஆப்ரிக்காவில் மான்ஸா காரை அறிமுகப்படுத்திய டாடா

நாட்டின் பெரும் வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் சர்வதேச அளவில் வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பல மாடல்களை வெளிநாட்டு மார்க்கெட்டுகளிலும் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், புதிய தலைமுறை பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டு வரும் மான்ஸா காரை தென் ஆப்ரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். 4.4 மீட்டர் நீளம், 1.7 மீட்டர் அகலமும் 2,520 மிமீ வீல் பேஸ் கொண்ட இந்த கார் உட்புறத்தில் அதிக இடவசதியை கொண்டிருக்கிறது.
15 வீல் அலாய் வீல்களுடன் தென் ஆப்ரிக்க மார்க்கெட்டில் இந்த கார் களமிறக்கப்பட்டு இருக்கிறது. 460 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம்இந்த காரில் அதிக பொருட்களை எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும். டூவல் டோன் இருக்கைகள், 2 டின் மியூசிக் சிஸ்டம் என பலவிதமான சிறப்பம்சங்களுடன் டாடா மான்ஸா சென்றிருக்கிறது.
ஃபியட் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சஃபையர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் சிறப்பான பவர் டெலிவிரியை கொடுக்கும் அதேநேரத்தில் அதிக மைலேஜும் கொடுக்கும். இந்த கார் லிட்டருக்கு 14.5 கிமீ மைலேஜ் தரும்ஸ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் உள்ள 45 டீலர்கள் வழியாக மான்ஸா செடான் கார் விற்பனை செய்யப்பட உள்ளதாக டாடா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








