புதிய ஸினான் பிக்கப் டிரக்: டாடா மோட்டார்ஸ் அறிமுகம்

வர்த்தக வாகன மார்க்கெட்டில் டாடாவுக்கும் மஹிந்திராவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. ஸைலோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட ஜீனியோ என்ற டிரக்கை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.
இதற்கு நேர் போட்டியை கொடுக்கும் வகையில் புதிய ஸினான் டிரக்கை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது டாடா. சிறந்த வடிவமைப்பு, தாராள இடவசதி, உறுதியான கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை தாங்கி வந்திருக்கிறது புதிய ஸினான்.
ஒற்றை வரிசை இருக்கை மற்றும் இரட்டை இருக்கை வசதிகொண்ட மாடல்களில் கிடைக்கும் இந்த புதிய டிரக்கில் 3.0 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த எஞ்சின் 72 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். தவிர, இந்த டிரக் மணி்க்கு 120 கிமீ வேகம் வரை செல்லும்.
ஓவர்டிரைவ் கியர் பாக்ஸ், ரேடியல் டயர்கள் ஆகியவை குறிப்பிட்டு கூறலாம். இந்த டிரக் அதிக மைலேஜ் தரும் என டாடா சான்றளிக்கிறது. 3 ஆண்டுகள் அல்லது 3 லட்சம் கிலோமீட்டருக்கான வாரண்டியுடன் இந்த புதிய டிரக் விற்பனைக்கு வந்துள்ளது.
வர்த்தக வாகன சந்தையில் டாடா மோட்டார்சுக்கு இந்த புதிய டிரக் நிச்சயம் முக்கிய பங்களிப்பை பெற்றுதரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5.44 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய பிக்கப் டிரக் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








