டாடா கார் விற்பனையில் முன்னேற்றம்: நானோவுக்கு முக்கிய பங்கு

Tata Nano
ஒருவழியாக நானோ காரின் சராசரி மாத விற்பனை நல்ல நிலையை எட்டியுள்ளது. கடந்த மாதம் 8,507 நானோ கார்கள் விற்பனையாகியுள்ளன.

தீப்பிடித்து எரிந்த சம்பவங்களால் நானோ கார் மீதான நம்பிக்கை பறிபோனது. இதனால், நானோ காரின் விற்பனை கணிசமாக வீழ்ச்சிக் கண்டது. இந்த நிலையில், நானோ காரிலிருந்த தொழில்நுட்ப பிரச்னைகளை சரிசெய்து, கூடுதல் அம்சங்களுடன் புதிய நானோ காரை கடந்த ஆண்டு இறுதியில் டாடா அறிமுகம் செய்தது.

புதிய நானோவுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக நானோவின் விற்பனை கவுரமான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. டாடாவின் 10,000 என்ற விற்பனை இலக்கை பூர்த்தி செய்யாவிட்டாலும், ஓரளவு கவுரவமான விற்பனையை எண்ணிக்கை நானோ கார் பெற்று வருகிறது.

கடந்த ஆண்டு மேமாதத்தில் 6515 நானோ கார்களை விற்பனை செய்திருந்த டாடா, கடந்த மாதம் 8,507 நானோ கார்களை விற்பனை செய்துள்ளது. இது 31 சதவீதம் வளர்ச்சி.

கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை வளர்ச்சியில் நானோ கார் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. நானோ கைகொடுத்ததால் கடந்த மாதம் 4 சதவீத விற்பனை வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் பதிவு செய்துள்ளது.

Article Published On: Monday, June 4, 2012, 14:47 [IST]
English summary
Tata Motors has posted a 4% increase in May sales after selling 64,347 vehicles. Tata Nano were 8,507 units, higher by 31%, compared to 6,515 units, sold in May, last year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+