விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய டாடா: நானோவும் கைகொடுத்தது

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் கடந்த மாதம் 1,00,414 வாகனங்களை மொத்தமாக விற்பனை செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் விற்பனை முதன்முறையாக ஒரு லட்சம் என்ற புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.
நானோ கார் விற்பனை:
பெரும் எதிர்பார்ப்புடன் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய நானோ காரின் விற்பனை இதுவரை பெரிய விற்பனை இலக்கை எட்டிப் பிடிக்க வில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10,012 நானோ கார்கள் விற்பனையாகி 10000 என்ற புதிய இலக்கை கடந்தது.
அதன்பிறகு எதிர்பார்த்த அளவுக்கு நானோ கார் விற்பனை அமையவில்லை. இந்த நிலையில், தற்போது நானோ காரின் விற்பனை முதன்முறையாக அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியுள்ளது. கடந்த மாதம் நானோ காரின் விற்பனை 10,475 என்ற புதிய எண்ணிக்கையை எட்டியது.
பட்ஜெட்டில் கார்கள் மீதான வரி உயர்த்தப்படலாம் என்ற அச்சத்தில் அனைத்து கார்களின் விற்பனையும் உயர்ந்தது. இந்த நிலையில், வரும் மாதங்களி்ல நானோ காரின் விற்பனை தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்த்துக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications







