நானோவுக்கு புதிதாக 230 பிரத்யேக ஷோரூம்களை திறக்கும் டாடா

நானோ விற்பனை அதிகரிக்க கற்ற வித்தைகளையும் காட்டி வருகிறது டாடா. சலுகைகள், எளிய கடன் திட்டங்கள் என நானோவுக்கு வாரி வழங்கி வரும் டாடா விற்பனையை அதிகரிக்க அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இன்னும் 12 மாதங்களில் நாடு முழுவதும் நானோவுக்கு 230 பிரத்யேக ஷோரூம்களை திறக்க இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக நெருங்கிய சேவையை வழங்க முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் பி.எம்.தலாங் கூறுகையில்,"தற்போது நானோவுக்காக 120 பிரத்யேக ஷோரூம்கள் உள்ளன.
இதை எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இன்னும் 12 மாதங்களி்ல் புதிதாக 230 பிரத்யேக ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








