புதிய சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கிய டாடா

லேண்ட்ரோவர் எஞ்சினியர்களின் ஆலோசனைகளுடன் புதிய சஃபாரி எஸ்யூவியின் வடிவமைப்பில் பல மாற்றங்களை செய்திருக்கிறது டாடா. ஆரியாவின் சேஸிஸ் மூலமாகவே இதுவும் தயாரிக்கப்பட உள்ளதால் கையாளுமையில் ஜோராக இருக்கும் என்று நம்பலாம்.
இந்த எஸ்யூவியில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 140 பிஎச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனை கொண்டிருக்கும். 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வரும் இந்த புதிய சஃபாரி ஸ்டார்ம் மைலேஜிலும் சிறப்பாக இருக்கும் என்கிறது டாடா.
அடுத்த மாதம் 18ந் தேதி சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்திருக்கிறது. இந்த நிலையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் டீலர்களில் இந்த புதிய எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கப்பட்டிருக்கிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு நேரடி போட்டியை கொடுக்கும் விதத்தில் வரும் சஃபாரி ஸ்டார்ம் ரூ.9 லட்சம் முதல் ர.12 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








