டிசம்பரில் டாடா பயணிகள் வாகன விற்பனை அமோகம்

Tata Nano
ஆண்டு இறுதியாக இருந்தாலும் கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் வாகன விற்பனை 47 சதவீதம் உயர்ந்தது. குறிப்பாக, நானோ காரின் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருவது அந்த நிறுவனத்திற்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

கடந்த மாதம் உள்நாட்டில் டாடா மோட்டார்ஸ் மொத்தம் 29,417 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இதை கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் 19,973 பயணிகள் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்த டிசம்பர் மாத விற்பனையை ஒப்பிடும்போது இது 47 சதவீதம் கூடுதல்.

இதில், நானோ காரின் விற்பனை மாதமாதம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 7,466 நானோ கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரை ஒப்பி்டும்போது(5,784 நானோ கார்கள்)இது 29 சதவீதம் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று இண்டிகா வரிசை கார்களின் விற்பனையும் 57 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் 5,923 இண்டிகா வரிசை கார்களை விற்பனை செய்திருந்த டாடா தற்போது 9,307 கார்களை விற்பனை செய்துள்ளது.

மொத்தத்தில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனை கடந்த டிசம்பரில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இதேபோன்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விற்பனையும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 2, 2012, 14:00 [IST]
English summary
The passenger vehicles business reported a total sale and distribution off take of 29,417 nos. in the domestic market in December 2011, higher by 47% compared to 19,973 nos.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+