பழைய மாடல்களுக்கு பதிலாக புதிய மாடல்கள்: டாடா முடிவு

கார்ல் ஸ்லிம்
தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களுக்கு பதிலாக முற்றிலும் புதிய மாடல்களை களமிறக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் திகழ்கிறது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக டாடா மோட்டார்ஸ் விற்பனையில் தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. மாஸ் மார்க்கெட்டில் புதிய மாடல்களை களமிறக்காததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்களின் வருவாய் புண்ணியத்தில்தான் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு வருவாய் சரிவு ஓரளவு ஈடுகட்டப்படுகிறது.

இந்த நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை நிமிர்த்தும் பணிகளை புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கார்ல் ஸ்லிம் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,"எங்களது தயாரிப்புகளை மொத்தமாக மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் புதிய தயாரிப்புகளை களமிறக்க உள்ளோம். இதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் எங்களிடம் உள்ளன. குறிப்பாக, அதிகம் விற்பனையாகும் மார்க்கெட்டில் புதிய மாடல்களை களமிறக்குவோம். மேலும், டாடா பிராண்டு மதிப்பை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்வோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 18, 2012, 10:42 [IST]
English summary
The leading Indian car manufacturer Tata Motors is considering a plan to overhaul its entire Indian portfolio along with brightening its image in the country, as mentioned by company’s domestic business head.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+