இரட்டிப்பான டாடா மோட்டார்ஸ் லாபம்: இவோக் எஸ்யூவி முக்கிய காரணம்

கடந்த ஆண்டு ஜனவரி-மார்ச் இடையிலான காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் ரூ.2,637 கோடியாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,234 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் கீழ் இயங்கும் பிரிட்டிஷ் நிறுவனமான ஜாகுவார் லேண்ட்ரோவரின் விற்பனை வளர்ச்சியால் டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் அதிகரிக்க காரணமாகியது. அதிலும், இவோக் எஸ்யூவிதான் நிகர லாபம் அதிகரிக்க முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, நடப்பாண்டின் முதல் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிகர வருவாய் ரூ.50,907 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.35,287 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, டாடா குழுமத்தின் வருங்கால தலைவரான சிரஸ் மிஸ்திரி டாடா மோட்டார்ஸ் போர்டு இயக்குனராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications








