320 சிஎன்ஜி பஸ்களை சப்ளை செய்ய டாடாவுக்கு பல்க் ஆர்டர்

By Saravana
Tata Bus
டெல்லி மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 320 சிஎன்ஜி பஸ்களின் சப்ளையை டாடா மோட்டார்ஸ் நேற்று துவங்கியது.

தலைநகர் டெல்லியின் போக்குவரத்தை உலகத் தரத்திற்கு இணையாக மாற்றும் வகையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக 320 சிஎன்ஜி பஸ்களை சப்ளை செய்ய டெல்லி பெருநகர போக்குவரத்து கழகத்திடமிருந்து டாடாவுக்கு ஆர்டர் கிடைத்தது.

இந்தநிலையில், எல்பிஓ 1613/55 மார்க்கபோலோ ரக சிஎன்ஜி பஸ்களின் சப்ளையை நேற்று டாடா மோட்டார்ஸ் துவங்கியது. மிக மிகக் குறைந்த கார்பன் புகையை வெளியிடும் இந்த புதிய சிஎன்ஜி பஸ்கள் முன்புற எஞ்சின் கொண்டது.

பாரத் ஸ்டேஜ் 4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்கள் கொண்ட இந்த புதிய பஸ்கள் பயணிகளுக்கு சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கைகள் மற்றும் சஸ்பெஷன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தவிர, சிஎன்ஜி சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டாலோ அல்லது தீ பிடித்தாலோ அது குறித்து உணர்ந்து எச்சரிக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளதால் மிகுந்த பாதுகாப்பு கொண்டதாக இருக்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

Article Published On: Saturday, September 15, 2012, 12:46 [IST]
English summary
Tata Motors today started supplying Tata Marcopolo fully-built, front-engine CNG buses, to route-cluster 2, under the Delhi Integrated Multi-Modal Transit System (DIMTS) Ltd. cluster scheme. The company has received an order for 320 such buses.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+