ஜெனிவா மோட்டார் ஷோவை கலக்கும் டாடாவின் மெகா பிக்ஸல்!

அடுத்த தலைமுறைக்கான கார்களை வடிவமைப்பதில் டாடா மோட்டார்ஸ் அதிக அக்கறை காட்டி வருகிறது. அந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஹைபிரிட் காரை ஜெனிவா மோட்டார் ஷோவில் டாடா பார்வைக்கு வைத்துள்ளது.
பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வரும் இந்த புதிய காருக்கு மெகா பிக்ஸல் என்று பெயர் சூட்டியுள்ளது டாடா. 4 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த புதிய கான்செப்ட் ஹைபிரிட் கார் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் வகையில் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும்.
பெட்ரோல் மற்றும் லித்தியம் அயான் பேட்டரியில் இயங்கும் இந்த எலக்ட்ரிக் கார் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 900 கிமீ தூரம் வரை செல்ல முடியும் என்கிறது டாடா. மேலும், இந்த கார் பேட்டரியில் செல்லும்போது கணக்கீட்டின்படி 100 கிமீ மைலேஜ் தரும் என்கிறது டாடா.
இந்த புதிய ஹைபிரிட் கார் ஒரு கிமீ.க்கு வெறும் 22 கிராம் கார்பனை மட்டுமே வெளியேற்றும் என்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை வெகுவாக தவிர்க்கும் தொழில்நுட்பத்தை இந்த கார் கொண்டிருக்கிறது. பிக்ஸல் கான்செப்ட் காருக்கு அடுத்து தற்போது மெகா பிக்ஸல் காரை ஐரோப்பிய மார்க்கெட்டில் பார்வைபடுத்தியுள்ளது டாடா.


Click it and Unblock the Notifications








