டீசல் இன்டிகா இவி2 விலையை 23,000 குறைத்த டாடா

உற்பத்தி செலவீனம் அதிகரிப்பால் கார்களின் விலையை முன்னணி நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. குறிப்பாக, டீசல் கார் விலையை நிறுவனங்கள் கண்ணை மூடிக்கொண்டே கொஞ்சம் அதிகமாகவே உயர்த்தி வருகின்றன. பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்களிடம் இது சற்று படபடப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விற்பனை சோர்ந்து போயிருப்பதால் அதிரடி முடிவுகளை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், டீசல் இன்டிகாவின் விலையை ரூ.23,000 குறைத்துள்ளது டாடா. இதன் மூலம், இன்டிகாவி இவி2 காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.4,01,162 ஆக குறைந்துள்ளது.
டாப் வேரியண்ட்டின் விலை ரூ.4,87,619 ஆக விற்பனை செய்யப்பட உள்ளது. அதிக மைலேஜ் தரும் காராக பெயர் பெற்றிருக்கும் டாடா இன்டிகா இவி2 காரில் 1.4 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, எம்பிஎப்ஐ பெட்ரோல் எஞ்சினுடன் இன்டிகா இவி2 கிடைக்கிறது. இந்த இரண்டு எஞ்சின்களும் பாரத் ஸடேஜ் 4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து நிறுவனங்களும் விலை உயர்வை கையிலெடுத்து அச்சுறுத்தி வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் டீசல் இன்டிகாவின் விலையை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications








