டாடா மோட்டார்ஸ் வழங்கும் ட்வென்ட்டி 20 ஆஃபர்

கார் விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில், பண்டிகை காலம் துவங்குவதையொட்டி வரும் 31ந் தேதி வரை பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, வரும் 31 ந் தேதி வரை கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்படும். அந்த கூப்பனில் இருக்கும் 2 கேள்விகளுக்கான விடையை கூப்பனில் நிரப்பி டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களில் கொடுக்க வேண்டும்.
ஒருவேளை, நீங்கள் வாங்கிய காருக்கான கூப்பன் குலுக்கலில் முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டால் நீங்கள் வாங்கிய காரையே பரிசாக எடுத்துச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. ஒரு நாளுக்கு ஒரு கார் வீதம் 20 நாட்களுக்கு 20 கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.
மேலும், 50,000 மதிப்புடைய பரிசுகள் இருவருக்கும், 20,000 மதிப்புடைய பரிசுகள் 7 பேருக்கும் மொத்தம் 20 நாட்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்சேஞ்ச் போனஸ், இலவச இன்ஸ்யூரன்ஸ் ஆகிய சலுகைகளுடன் ரூ.500 மதிப்புடைய நிச்சய பரிசும் வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், விபரங்களுக்கு அருகிலுள்ள டாடா மோட்டார்ஸ் ஷோரூமை அணுகுங்கள்.


Click it and Unblock the Notifications








