நானோ காருக்கு 'இ-பே' ஆன்லைன் ஸ்டோரில் கடை திறந்த டாடா!

Tata Nano
பிரபல ஆன்லைன் வியாபார தளமான இ-பே.இன் தளத்தில் நானோ காருக்கு பிரத்யேக வர்த்தக பக்கத்தை டாடா மோட்டார்ஸ் திறந்துள்ளது. இதில், நானோ கார் பிராண்டுடன் டீசர்ட், கம்ப்யூட்டர் ஆக்சஸெரீஸ்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

நானோ காரின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், நானோ கார் ஏழைகளின் கார் என்ற எண்ணத்தை மாற்றும் முயற்சிகளையும் அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், நானோ கார் பிராண்டின் மதிப்பை உயர்த்தும் வகையில், இ-பே ஆன்லைன் இணையதளத்தில் வியாபார பக்கத்தை திறந்துள்ளது டாடா மோட்டார்ஸ். இந்த பக்கத்தில் நானோ பிராண்டில் பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

டீசர்ட்டுகள், கைக்கடிகாரங்கள், தொப்பிகள், கம்ப்யூட்டர் ஆக்சஸெரீஸ்கள், மினியேச்சர் நானோ கார் மாடல் போன்றவை இந்த ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாங்க முடியும். இதுதவிர, இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட பலவிதமான சேவைகளை இந்த பக்கத்தில் பெற முடியும்.

இந்தியாவில் தயாரிப்பாகும் கார் மாடலுக்கு இபே ஆன்லைன் ஸ்டோரில் வியாபார பக்கம் திறக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. மேலும், ஆன்லைனில் கார் புக்கிங் செய்யும் முறை முதன்முதலாக நானோ காருக்குத்தான் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா நானோவின் இ-பே ஆன்லைன் ஸ்டோருக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

More from DriveSpark

Article Published On: Saturday, August 18, 2012, 11:36 [IST]
English summary
Tata Nano today launched the 'Nano merchandise online store' on Ebay. This is the first time that a car brand will be selling its merchandise through Ebay.in.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+