நானோ காருக்கு அதிரடி எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கும் டாடா

Tata Nano
இருசக்கர வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்து நானோ கார் வாங்கினால், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனசை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது.

கடந்த இரு மாதங்களுக்கு முன் கூடுதல் அம்சங்களுடன் புதிய மாடல் நானோ காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்தது.

அதிக பிக்கப் மற்றும் கூடுதல் மைலேஜ் கொடுக்கும் வகையில், ட்யூனிங் செய்யப்பட்ட எஞ்சின், புதிய வண்ணங்கள், இரு புறமும் ரியர் வியூ மிரர் மற்றும் சக்திவாய்ந்த ஏசி, மேம்படுத்தப்பட்ட உட்புறம் ஆகிய மாற்றங்களுடன் புதிய நானோ விற்பனைக்கு வந்தது.

எனவே, புதிய நானோ வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த நிலையில், நானோவுக்கு பல அதிரடி ஆஃபர்களை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது.

நானோ கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் காரை எக்ஸ்சேஞ்ச் செய்தால் 25,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், இருசக்கர வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்தால் 20,000 ரூபாயும் வழங்குகிறது.

மேலும், ரூ.15,000 மட்டுமே முன்பணமாக கட்டினாலே நானோ காரை வீட்டிற்கு ஓட்டிச்செல்லும் சலுகையும் கிடைக்கிறது. வரும் 29ந் தேதி வரை இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, February 6, 2012, 13:43 [IST]
English summary
Tata Motors is offering exchange bonus offer on 2012 Tata Nano. Nano buyers now able to get Rs.25,000 exchange bonus on four-wheeler and Rs.20,000 exchange bonus on two-wheeler. The 2012 Tata Nano will offer a fuel economy of 25.4kmpl, have 10 paint options and is powered by a more powerful petrol engine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+